/, News, Vasantham/வசதி குறைந்த பிள்ளைகளின் தேவைகள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்: அதிபர் ஹலிமா

வசதி குறைந்த பிள்ளைகளின் தேவைகள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்: அதிபர் ஹலிமா


(கோப்புப் படம்: TODAY)

கிருமிப்பரவல் சூழலில், சிங்கப்பூரிலுள்ள வசதி குறைந்த பிள்ளைகளின் தேவைகள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

கல்வி, ஆரோக்கியம் குறித்த அம்சங்களில் அவர்களுக்கு முறையான கவனிப்பு கிடைப்பது அதிக முக்கியம் என்றார் அவர்.

மாணவர் பராமரிப்பு நிலையத்துக்குச் சென்றிருந்தபோது அவர் அவ்வாறு கூறினார்.

இலையுதிர்கால விழாக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அங்கு, விளக்குகளைத் தயாரிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடக்க நிலை முதலாம், இரண்டாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 20 பேர் அதிபருடன் சேர்த்து விளக்குகளைச் செய்தனர்.

சிங்கப்பூர் இளையர் குழு Zoom செயலி வழியே அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

வசதி குறைந்த பிள்ளைகளுக்கு உதவுவதில் சுய உதவிக் குழுக்கள் முன்வந்து பங்கேற்பதை அதிபர் ஹலிமா பாராட்டினார்.

-Tamil Seithi, Vasantham

2020-11-06T05:03:12+00:00September 30th, 2020|Media Reports, News, Vasantham|0 Comments